விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை ப...
இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு
புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதனை மேற்கோள்காட்டியே, ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.
எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் உயர்த்தி இன்று அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்காவின் எச்-1பி விசா பெற ரூ.90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு, இந்திய தகவல்தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
I repeat, India has a weak PM. https://t.co/N0EuIxQ1XGpic.twitter.com/AEu6QzPfYH
— Rahul Gandhi (@RahulGandhi) September 20, 2025
அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு குறித்த செய்திய தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் ராகுல் காந்தி, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.