`அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இந்திய நகரங்கள்' - பட்டியலில் மும்பைக்கு முதலிடம்! ச...
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையின் தலைமையில் வியாழக்கிழமை மாலை முதல் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இன்று அதிகாலை வனப் பகுதிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.