செய்திகள் :

'எனக்கு 6க்கு 4தான் கிடைத்தது': 2 பூரி கேட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழுது போராட்டம் நடத்திய பெண்

post image

பானிப்பூரி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மாலையாகிவிட்டால் அப்படியே கூட்டமாகச் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். குஜராத் மாநிலத்தில் 2 பானிப்பூரி குறைவாகக் கொடுத்ததாகக் கூறி பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து அழுது அடம்பிடித்த காட்சி வைரலாகி இருக்கிறது. அங்குள்ள வதோதராவில் சுர்சாகர் ஏரி அருகில் பானிப்பூரி வியாபாரி ஒருவர் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

அங்கு பெண் ஒருவர் பானிப்பூரி சாப்பிட வந்தார். வியாபாரி 20 ரூபாய்க்கு 6 பானிப்பூரி கொடுத்து வந்தார். 20 ரூபாய்க்கு அப்பெண் பானிப்பூரி சாப்பிட ஆரம்பித்தார். வியாபாரியிடம் வேறு சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பானிப்பூரியாக வியாபாரி கொடுத்துக்கொண்டே இருந்தார். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பானிப்பூரியைக் கொடுத்துவிட்டு எண்ணிக்கை முடிந்ததாக வியாபாரி தெரிவித்தார். ஆனால் அப்பெண் தனக்கு 4 பூரிதான் கிடைத்தது என்று தெரிவித்தார்.

ஆனால் வியாபாரி 6 பானிப்பூரி கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் வியாபாரி 6 பானிப்பூரி கொடுத்துவிட்டேன் என்று உறுதியாக சொன்னார்.

2 பானிப்பூரி கொடுத்தால்தான் ரோட்டில் இருந்து எழுவேன்
பானிப்பூரி

இதனால் கோபம் அடைந்த அப்பெண் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டார். எனக்கு மேலும் 2 பானிப்பூரி கொடுத்தால்தான் ரோட்டில் இருந்து எழுவேன் என்று கூறி நடுரோட்டில் அமர்ந்துவிட்டார். இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை அப்படியே நிறுத்தினர். இதனால் அப்பெண்ணைச் சுற்றி கூட்டம் கூடியது.

வாகன ஓட்டுநர்கள் இறங்கி வந்து அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனக்கு மேலும் 2 பூரி கிடைக்காதவரை எழுந்திருக்க மாட்டேன் என்று கூறி அடம்பிடித்து சாலையில் அமர்ந்து இருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவலர்கள் வந்தனர். போலீஸார் வருவதைப் பார்த்த அப்பெண் கதறி அழ ஆரம்பித்தார். போலீஸாரிடம் தனக்கு வியாபாரியிடமிருந்து 2 பானிப்பூரியை வாங்கிக்கொடுக்கும்படி கேட்டு அடம்பிடித்தார்.

போலீஸார் பேசிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. இதனால் அப்பெண்ணை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அதன் பிறகுதான் போக்குவரத்து சரியானது. அப்பெண் பானிப்பூரிக்காக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

வகுப்பு மேசைகளில் 'ரோலர் கோஸ்டர்' பார்; வைரலாகும் சீனப் பள்ளிகளின் புகைப்படம் - பின்னணி என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன், கணினி போன்ற மின்னணு திரைகளைப் பார்ப்பதால், அவர்களின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கிட்டப்பார்வை குறைபாடு உலகளவில் குழந்த... மேலும் பார்க்க

`டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்...'- கோவா சென்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்தது என்ன?

வெளியூர்களுக்கு பயணம் செய்து சுற்றுலா மேற்கொள்ளும் போது பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் பயணிகள் சந்திக்கின்றனர். அந்த வகையில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு க... மேலும் பார்க்க

iPhone 17: இரவிலிருந்தே காத்திருந்த மக்கள்; மும்பை ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் தள்ளுமுள்ளு!

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஐபோன் 17 (iPhone 17 Pro and Pro Max) இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் ஷோரூம் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கிறது. மும்பையில் உள்ள பாந்த்ர... மேலும் பார்க்க

விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்; சீனாவில் புதிய வினோத நடைமுறைக்கு குவியும் கண்டனங்கள்!

சீனாவில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பரை வீணாக்குவதைத் தடுக்கும் நோக்கில், அதைப் பெறுவதற்கு முன் பயனர்கள் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வி... மேலும் பார்க்க

'கண்ணுக்குத் தெரியாத' வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி; இன்ஃப்ளூயன்சருக்கு வந்த சோதனை!

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கண்ணுக்குத் தெரியாத வீட்டில்' (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், ... மேலும் பார்க்க

Egypt: அருங்காட்சியகத்தில் இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு மாயம் - பின்னணி என்ன?

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற... மேலும் பார்க்க