Kiss Review: காமெடி காதல் கதையில் ஃபேண்டஸி மத்தாப்பு - இந்தப் புதுமை க்ளிக்காகிற...
விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்: லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிப்பு!
ஐரோப்பாவில் முக்கிய விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் விமான சேவை சனிக்கிழமை(செப். 20) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ப்ரஸ்ஸல்ஸ், பெர்லின், லண்டனின் ஹீட்த்ரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விமான நிலையங்களில் பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் இதர விமான சேவைகளுக்கு இணையவழியில் சேவையளிக்கும் நிறுவனமான ‘காலின்ஸ் ஏரோஸ்பேஸ்’ தளம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகள் விமான நிலையத்தைக் கடந்து உள்ளே அனுப்பப்படும் நடைமுறை தாமதமாகியுள்ளது. இந்தத் தகவலை ஹீட்த்ரோ விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், விமான நிலையங்களில் நெடுநேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளகியுள்ளனர்.