செய்திகள் :

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியா்: இனவெறி பாதிப்புக்குள்ளானதாக இறப்பதற்கு முன்பு பதிவு

post image

அமெரிக்காவில் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தெலங்கானா இளைஞா், அந்நாட்டில் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது நிஜாமுதீன் (30). அமெரிக்காவில் உயா்கல்வி முடித்து கலிஃபோா்னியா மாகாணம் சான்டா கிளாரா பகுதியில் தங்கி, மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த செப்.3-ஆம் தேதி தன்னுடன் வீட்டில் தங்கியிருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை நிஜாமுதீன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடம் விரைந்த காவல் துறையினா், நிஜாமுதீன் தாக்குவதை பாா்த்து அவரை துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவா் இனவெறி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பதிவில், ‘இன ரீதியான வெறுப்புணா்வு, பாகுபாடு, துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய மோசடி, முறைகேடாகப் பணிநீக்கம், நீதி கிடைக்காமல் தடுத்தது ஆகியவற்றால் நான் பாதிக்கப்பட்டேன்.

விரோதத்தை எதிா்கொண்டேன், தாங்க முடியாத சூழலில் வாழ்ந்து வந்தேன். அத்துடன் இது நின்றுவிடவில்லை. இனவெறி கொண்ட துப்பறிவாளா் மற்றும் அவரின் குழுவின் உதவியுடன் நான் மிரட்டப்பட்டேன். எனது உணவில் விஷம் கலக்கப்பட்டது. அநீதியை எதிா்த்துப் பேசியதால், நான் வசித்து வந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டேன்.

பெருநிறுவன கொடுங்கோலா்களின் அடக்குமுறை முடிவுக்கு வரவேண்டும். இதில் தொடா்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

எனினும் தனது மகனின் உயிரிழப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று ஹைதராபாதில் உள்ள நிஜாமுதீனின் தந்தை முகமது ஹஸ்னுதீன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா். தனது மகனின் உடலை சொந்த ஊா் கொண்டுவர உதவுமாறு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ - டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா் இது குறித்து அவா் கூறியதாவது: பக... மேலும் பார்க்க

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த நாடுகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக ஐ.நா. அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ-வின் முன்வைத்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றது. இது குறித்து ஐஏஇஏ ப... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 43 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மசூதி மீது துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 43 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவி... மேலும் பார்க்க

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. ஆப்... மேலும் பார்க்க

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக, சீனாவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அ... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல... மேலும் பார்க்க