புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) தொடக்கி வைத்தார்.
பயிற்சியைத் தொடங்கி வைத்த அவர் பயிற்சி நூலை வெளியிட்டதுடன் தமிழகம் முழுவதும் ரூ. 277 கோடி மதிப்பீட்டில் 243 பள்ளிகளில் புதிய கட்டுமானங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல, சென்னையில் தமிழ்நாடு பாரத சாரண - சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டவும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின், அவர் ரூ.94 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன், 2024-2025 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற 143 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர்கள் கே. என் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க:எதையும் செய்யறிவிடம் கேட்கலாம் என மெத்தனமாக இருக்கக் கூடாது: மு.க. ஸ்டாலின்