கலைஞர் வீடு அருகே சல்வார் ஷோரூம் திறந்த முதல்வரின் சகோதரி; கலந்துகொண்ட பிரபலங்கள...
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 23) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கோயம்புத்தூரின் மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை