மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,652 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,849 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 6,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று(செப். 23) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.83 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 91.96 டிஎம்சியாக உள்ளது,
இதையும் படிக்க: அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!