செய்திகள் :

ரூ. 84,000-ஐ கடந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!

post image

சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று(செப். 23) அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

நிகழாண்டு தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது.

தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த செப்.16-ஆம் தேதி சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

கடந்த செப்.18-இல் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும், செப்.19-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, சனிக்கிழமை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று(செப். 22) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,880-க்கும் விற்பனையாது.

தொடர்ந்து மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு மேலும் ரூ.70 உயர்ந்து ரூ.10,430-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.83,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 10,500-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு: வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.49 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

The price of gold jewellery in Chennai has risen sharply today (Sept. 23) by Rs. 560 per sovereign.

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று(செப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,652 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,849 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க