செய்திகள் :

அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

post image

பரபரப்பான ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ரீதியிலான மோதல் வேகமெடுத்துள்ளது. ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

இதனை இந்தியா ஏற்காத நிலையில், கடுமையான விரிகளை விதித்து இந்தியா மீது வர்த்தக ரீதியில் தாக்குதலை தொடர்ந்தார்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வேலைபார்க்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியாக அமெரிக்காவின் ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தும் உத்தரவில் டிரம்ப் கையொப்பமிட்டார். இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு பேரிடியாக விழுந்தது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஐ.நா. பொதுச் சபையின் 80-வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

“இந்தியா, அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடு. வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருந்துகள் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றில் இந்தியாவின் ஈடுபாட்டிற்கு பாராட்டுகள்” என மார்கோ ரூபியோ கூறியதாக வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இருநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

India is critical to US, Rubio says after Jaishankar meet amid H-1B visa row

இதையும் படிக்க... ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!

விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களும், விமான இருக்கையை முன்பதிவு செய்பவர்களும் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள், அதுதான் 13வது இருக்கை எண் ஒதுக்கப்படாமல் இருப்பது.இது ஏதோ தவறுதலாக நடந்த நி... மேலும் பார்க்க

பாடகர் ஸுபின் கார்க்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை! இறந்த பின்னரும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்!

மறைந்த அசாம் பாடகரின் ஸுபின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த பிரபல அசாம் பாடகர் ஸுபின் கார்க், ஸ்கூபா டைவிங் சாகசத்தி... மேலும் பார்க்க

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்... மேலும் பார்க்க

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குள... மேலும் பார்க்க