வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!
மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு.
மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகளான லவ் பேர்ட்ஸ், குருவி வகைகளை தனது வீட்டு மொட்டை மாடியில் கூண்டு அமைத்து வளர்த்து வருகிறார்.
பறவைகளுக்கு உணவளிப்பதற்காக சென்ற ராஜன், பறவை ஒன்று இறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மற்ற பறவைகளும் பயந்த நிலையில் இருப்பதைக் கண்டு உள்ளே பார்த்தபோது, நாகப் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதைக் கண்டதும், விலங்கு நல ஆர்வலரான ஸ்நேக் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த ஸ்நேக் பாபு, மூன்றரை அடி நாகப் பாம்பு வகையைச் சேர்ந்த பொறிநாகம் என்பதைக் கண்டறிந்தார். நாகப் பாம்பைப் பிடித்து, புதுக்கோட்டை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.
இதையும் படிக்க: விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்