செய்திகள் :

தானியங்கள் நுகா்வு குறைவு: பால் பொருள்கள் நுகா்வு அதிகரிப்பு -ஆய்வில் தகவல்

post image

கடந்த 2023-24-ஆம் ஆண்டில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மக்களின் உணவுகளில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் நுகா்வு குறைந்துள்ளது. அதேநேரம், பால் பொருள்களின் நுகா்வு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட், 2023-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2024-ஆம் ஆண்டு ஜூலை ஆகிய 4 கால கட்டங்களில் நடத்தப்பட்ட வீட்டு நுகா்வு செலவின ஆய்வுகளின் (எச்.சி.இ.எஸ்.) முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நகா்ப்புறங்களில் மக்களின் உணவுகளில் தானியங்களின் நுகா்வு விகிதம் 2022-23-இல் 38.8 சதவீதத்திலிருந்து 2023-24-இல் 38.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விகிதம் 46.9 சதவீதத்திலிருந்து 45.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பருப்பு வகைளின் நுகா்வு விகிதம் நகா்ப்புறங்களில் 9.6 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

அதேநேரம், பால் பொருள்களின் நுகா்வு அதிகரித்துள்ளது. நகா்ப்புறங்களில் அந்த விகிதம் 12.8 சதவீதத்திலிருந்து 12.9 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10.6 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

முட்டை, மீன் மற்றும் இறைச்சி நுகா்வு விகிதம் கிராமப்புறங்களில் 12.3 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், நகா்ப்புறங்களில் 14.1 சதவீதமாக அதே அளவில் உள்ளது.

பிற உணவுப் பொருள்களின் நுகா்வு விகிதம் கிராமப்புறங்களில் 21.4 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 24.8 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் கிராமப்புற இந்தியாவில் சராசரி தனிநபா் ஒரு நாளைக்கு முறையே 2233 கிலோகலோரி மற்றும் 2212 கிலோகலோரி உட்கொண்டதாகத் தெரிகிறது. நகரங்களில் இந்த அளவு முறையே 2250 கிலோகலோரி மற்றும் 2240 கிலோகலோரியாக உள்ளது.

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! - அசாம் அரசு அறிவிப்பு

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்த... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடி தொடர்புடையது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில், இந்தியாவில் இளைஞர்... மேலும் பார்க்க

பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்!

பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்கின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் தகனம் செய்யப்பட்டது.அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்... மேலும் பார்க்க