செய்திகள் :

ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி பயணம்!

post image

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். அங்கு, புதிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று(செப். 23) சந்திக்கிறார்.

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (67) கடந்த செப். 12-ல் பதவியேற்றார்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி சென்றுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று மாலை சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கவுள்ளார்.

மேலும் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மற்றும் பிரதமா் மோடியை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக ஆளுநரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? முதல்வர் கேள்வி!

Tamil Nadu Governor R.N. Ravi has gone to Delhi on a one-day visit.

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? முதல்வர் கேள்வி!

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாமே என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீர்திருத்தம் நாடு முழுவ... மேலும் பார்க்க

ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியைப் பயன்படுத்தி ம... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!

மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு.மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... மேலும் பார்க்க

அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு

வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, வருகிற அக். 14 ஆம்... மேலும் பார்க்க

முக்கிய ஆலோசனை! முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ... மேலும் பார்க்க

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்! அண்ணாமலை

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு க... மேலும் பார்க்க