செய்திகள் :

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட்! அண்ணாமலை

post image

ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பம்பா நதிக் கரையில், ஐயப்ப பக்தர்களின் சர்வதேச மாநாட்டை கேரள அரசு கடந்த வாரம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம், பந்தளத்தில் பாஜக சார்பில் சபரிமலை சமரக்ஷண சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடக்க விழாவில், தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, சபரிமலையை வைத்து கேரள அரசு பிக்-பாக்கெட் அடிப்பதாக விமர்சித்திருந்தார். மேலும், கேரளம் மற்றும் தமிழக முதல்வர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசும்போது, கேரள அரசின் ஐயப்ப பக்தர்கள் மாநாடு குறித்து விமர்சனத்தை முன்வைத்தார்.

அண்ணாமலை பேசியதாவது:

”கேரளத்தில் தொடர்ந்து பாஜக தொண்டர்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவினரை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024 -25 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 421 கோடி காணிக்கையாக பக்தர்கள் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளிலும் தலா ரூ. 350 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பெயர் பிக்-பாக்கெட் இல்லாமல் வேறென்ன?

தமிழகத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்றனர். சபரிமலையில் தமிழக அரசுக்கு 5 ஏக்கர் ஒதுக்குமாறு அமைச்சர் சேகர் பாபு கோரிக்கை வைக்கிறார். தமிழகத்தில் காணாமல் போன 1.25 லட்சம் கோயில் நிலத்தை மீட்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் முதலில் பேச அழைக்கவில்லை என்று சண்டை போட்டுள்ளார். சநாதனத்துக்கு எதிராக பேசும் மு.க. ஸ்டாலினை எதற்காக பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். அவர் போகாமல் இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

பினராயி விஜயன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர். கடவுள் இல்லை என்பவர். அவர் ஏன் ஐயப்பனுக்கு மாநாடு நடத்த வேண்டும்? அரசியல் ஆதாயத்துக்காக இதை செய்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

Kerala government pick-pockets Ayyappa - Annamalai

இதையும் படிக்க : டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியைப் பயன்படுத்தி ம... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!

மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு.மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... மேலும் பார்க்க

அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு

வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, வருகிற அக். 14 ஆம்... மேலும் பார்க்க

முக்கிய ஆலோசனை! முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ... மேலும் பார்க்க

மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க