ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் போட்டி டிரா ஆன நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி இன்று (செப். 23) லக்னௌவில் தொடங்கியது.
போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, இந்தியா ஏ அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதனால், இந்தியா ஏ அணியின் துணை கேப்டன் துருவ் ஜூரேல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதற்கான அதிகாரபூர்வ மற்றும் உறுதியான காரணங்கள் வெளியாகவில்லை என்றாலும், தனிபட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளதாக இந்திய அணித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணியில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், நிதீஷ்குமார் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி விவரம்
துருவ் ஜூரேல் (கேப்டன்), ஜெகதீஷன், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், நிதீஷ்குமார் ரெட்டி, பலோனி, பிரசாத், முகமது சிராஜ், குர்னூர், மானவ் சுதர்.