செய்திகள் :

பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை இனி ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இலக்கை 19 வது ஓவரில் அடைந்து வெற்றி பெற்றது.

கடந்த லீக் போட்டியின் போது, ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் சென்றது சர்ச்சையான நிலையில், நேற்றைய ஆட்டத்துக்கு பிறகும் இந்திய அணியினர் கைக்குலுக்கவில்லை.

இந்த நிலையில், ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ், இனிமேல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று சிரித்தபடி கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”இனியும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரைவல்ரியாக நினைத்துக் கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ரைவல்ரி என்பது இரு அணிகள் 15 ஆட்டங்களில் விளையாடி, 8 - 7 என்ற வெற்றியை பதிவு செய்திருந்தால் ரைவல்ரி என்று அழைப்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், 3-0, 10-1 என்ற வெற்றி கணக்கில் இருக்கும் இரு அணிகளை ரைவல்ரி என அழைப்பது சரியல்ல. இது வெறும் போட்டி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ள நிலையில், இந்தியா 12 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

Indian captain Suryakumar Yadav has said that the India-Pakistan match should no longer be called a 'rivalry'.

இதையும் படிக்க : அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!

அபிஷேக், திலக் வர்மா அதிரடி: பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது இந்தியா!

ஆசியக் கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மா, திலக் வர்மாவின் அதிரடியால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்கள் திரட்டியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பவர்-பிளே ஓவர்களில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.இ... மேலும் பார்க்க

இந்தியாவை பழிதீர்க்குமா பாகிஸ்தான்? முதலில் பேட்டிங்!

ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது.இதையடுத்து, இந்தியாவை பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்கும் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய ஆயத... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கு ஆட்டத்துக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 பிரிவு ஆட்டத்தில் சைஃப் ஹாஸன், தௌஹித் அபார ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 பிரிவில் வங்கதேசம்-இல... மேலும் பார்க்க