டிரம்ப், புதின், ஜின்பிங் மூவருக்குமே மோடி நண்பர்! -குடியரசு துணைத் தலைவர் சி.பி...
நடிகை அம்பிகா, ஜோவிகா பங்கேற்கும் சமையல் எக்ஸ்பிரஸ் -2!
சமையல் எக்ஸ்பிரஸ் -2 நிகழ்ச்சியில் நடிகை அம்பிகா மற்றும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.
நடிகை சுஜிதா மற்றும் ஷாலின் ஸோயா ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, சிறப்பு விருந்தினர்களின் வருகையுடன் நகைச்சுவை, நினைவுகூரல் போன்ற உணர்வுகளின் மூலம் ரசிகர்களைத் தக்கவைக்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சமையல் எக்ஸ்பிரஸ் சிசன் -2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை சுஜிதா மற்றும் ஷாலின் ஸோயா தொகுத்து வழங்குகின்றனர்.
இதில், வாரம் ஒரு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சமையல் கலையில் அவர்களின் திறனை வெளிப்படுத்துவார்கள்.
வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி சிறப்பு விருந்தினர்களாக வரும் பிரபலங்களின் நெகிழ்ச்சியான சம்பவங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் நகைச்சுவையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக சமையல் எக்ஸ்பிரஸ் உள்ளது.

இதனால், வாரவாரம் வரும் புதிதாக வரும் சிறப்பு விருந்தினர்களுக்காகவே சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் பலர். அந்தவகையில் இந்த வாரம் நடிகை அம்பிகாவும், பிக்பாஸ் புகழ் ஜோவிகாவும் பங்கேற்கின்றனர். இருவருமே சமையலில் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் நிலையில், இருவரிடையே இருக்கும் குடும்ப உறவு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |வைரலாகும் ஆஹா கல்யாணம் தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள்!