செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; காவல் நிலையம் முன்பு விஷமருந்தி ஜோடி தற்கொலை செய்த பரிதாபம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி. கார் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி, கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது எதிர்வீட்டில் வசித்து வந்த சுப்பையா என்பவரின் மனைவி பார்வதியுடன் தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. சுப்பையா- பார்வதி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். எனினும் பார்வதி தங்கவேல்சாமியுடன் பேசிப் பழகி வந்தார்.

தற்கொலை செய்து கொண்ட தங்கவேல்சாமி- பார்வதி

நாளடைவில் இது திருமணம் மீறிய உறவாக மாறியது. இதனை அறிந்த இருவரது குடும்பத்தினரும் அவர்களைக் கண்டித்தனர். இருப்பினும் தங்கவேல்சாமி பார்வதியுடன் பேசுவதை நிறுத்தவில்லை. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி காரில் புறப்பட்டு பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில், திருச்செந்தூருக்கு வந்த அவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

பின்னர், அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்திற்கு வந்த அவர்கள், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் காரில் அமர்ந்தபடியே விஷம் அருந்தியுள்ளனர். பின்னர் மனம் மாற்றம் ஏற்பட்டு, 2 பேரும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு முன்பு காரை நிறுத்திவிட்டு ”நாங்கள் விஷம் குடித்துவிட்டோம். எங்களை காப்பாற்றுங்கள்” எனக் காரில் இருந்தபடியே அழுது கதறியுள்ளனர்.

அவர்கள் வந்த கார்

காவல் நிலையத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுமதித்தனர். ஆனால், அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

BJP எம்.பி. மனைவியை ஏமாற்றிய கும்பல்; ரூ.14 லட்சம் பறிப்பு - நடந்தது என்ன?

நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் பெண்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை பறித்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில... மேலும் பார்க்க

திருமணமான நபருடன் காதல்; உயிரிழந்த கல்லூரி மாணவி - பின்னணி என்ன ?

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக, விருத்தாசலத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: நாடோடி சமூக பள்ளி மாணவனைத் தாக்கிய தலைமை ஆசிரியர்; இருவர் கைது; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாவீரன் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நாடோடி பழங்குடி வகுப... மேலும் பார்க்க

ஒயின் ஷாப்பில் பிடிபட்ட நோட்டு; அலர்ட்டான போலீஸ்; கைதான கும்பல் - கரூர் அதிர்ச்சி

கரூரில் கடந்த 9 - ம் தேதி தாந்தோன்றிமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காண்டீபன் (வயது 52) என்பவர் ரூ.500 கொடுத்து மதுபானம் வாங்கியபோது மேற்படி கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணுவிஜய் என்பவர் காண்டீபன் கொ... மேலும் பார்க்க

UP: "உயர் அதிகாரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்ல" - பணியிலிருந்த அரசு டாக்டரை கடத்தி சென்ற போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ராகுல் பாபு. இவர் இரவில் எமர்ஜென்சி பணியில் நியமிக்கப்பட்டு இருந்தார். அந்நேரம் 4 போலீஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந... மேலும் பார்க்க