செய்திகள் :

எச்-1பி விசா கட்டண உயர்வால் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன. இருப்பினும், தெளிவுபடுத்தப்பட்டதன் மூலம் சிறிது மீட்சி இருந்தாலும், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.

புளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகள் வெகுவாக சரிந்தன. இன்று முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் அதானி குழுமப் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்து கொள்முதல் செய்ததால், சந்தைகள் இழப்புகளை சற்றே மீட்டெடுக்க உதவியது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சந்தை சரிந்த நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 628.94 புள்ளிகள் சரிந்து 81,997.29 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 466.26 புள்ளிகள் சரிந்து 82,159.97 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 124.70 புள்ளிகள் சரிந்து 25,202.35 புள்ளிகளாக நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.7% சரிந்தன. துறை ரீதியாக ஐடி குறியீடு 2.7 சதவிகிதமும், மருந்து துறை 1.2 சதவிகிதமும் சரிந்த நிலையில், மின் குறியீடு 1.6 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.4 சதவிகிதம் மற்றும் உலோக குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்தன.

சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ், டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்தன.

நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிப்லா உள்ளிட்ட பங்குகள் சரிந்த அதே நிலையில் அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, எடர்னல், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

என்.பி.சி.சி. (இந்தியா) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஹட்கோ பங்குகளின் விலை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது. ஆர்.வி.யு.என்.எல். உடனான கூட்டு முயற்சிக்குப் பிறகு ஆயில் இந்தியாவின் பங்குகள் 1.2% அதிகரித்தன.

பங்குகள் பிரித்ததால் அதானி பவர் 20% உயர்ந்தது. பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஐஓசி, நெட்வெப் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதால் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் 2.7% உயர்ந்தன.

ரூ.450 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டர் பெற்றதையடுத்து இந்தியாவின் நெட்வெப் டெக்னாலஜிஸ் பங்குகள் 7% அதிகரிப்பு. ரூ.18.06 கோடி ஆர்டர் பெற்ற போதிலும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் 2% சரிந்தன.

அதானி பவர், முத்தூட் ஃபைனான்ஸ், பாலிகேப், எடர்னல், கனரா வங்கி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ், ராடிகோ கைதன், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், யுஎன்ஓ மிண்டா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், குஜராத் மினரல், ஹூண்டாய் மோட்டார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.

இந்தியா உள்பட, அமெரிக்காவில் வசிக்கவும், வேலை செய்யவும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, இந்தப் புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதே வேளையில், எச்1பி விசா கட்டணம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் என்பது புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தி உள்ளது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. இதனை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.10 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.61 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.390.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ஜிஎஸ்டி மாற்றமே இவர்களுக்குத்தான்! இன்று முதல் ஜாக்பாட்!!

The information technology stocks remained under pressure after US President Donald Trump levied $100,000 fee on new H-1B visa, however, seen some recovery on clarification.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31ஆக நிறைவு!

மும்பை: டிரம்பின் எச்1பி விசா கட்டண உயர்வு, இந்தியர்களின் பணப் பரிமாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31 ஆக நிறைவடைந்தது. வங்... மேலும் பார்க்க

அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு முன்கூட்டியே சலுகை! என்னென்ன வாங்கலாம்?

அமேசான் பிரைம் பயன்படுத்துவோருக்கு முன்கூட்டியே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா மூலம் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சலுகை விலையில் பொருள்களை வழங்கி வருகிறது. இந்த முறை ச... மேலும் பார்க்க

எச்1பி விசா எதிரொலி! ஐடி பங்குகள் சரிவுடன் வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவுடன் 82,175 ப... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி மாற்றமே இவர்களுக்குத்தான்! இன்று முதல் ஜாக்பாட்!!

ஜிஎஸ்டி வரி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமே வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்கானது என்று சொல்லும் அளவுக்கு இன்று முதல் பெரும்பாலான பொருள்களின் விலைகள் குறைந்துள்ளன.இன்று முதல் நடைமுறைக்கு வந... மேலும் பார்க்க

செப்டம்பரில் ரூ.7,945 கோடியை வெளியேற்றிய அந்நிய முதலீட்டாளர்கள்!

புது தில்லி: உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர் புவிசார் அரசியல் பதட்டங்களால், அந்நிய முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் ரூ.7,945 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் ரூ.34,990 கோடியும்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!

புது தில்லி: பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட், நியூட்ரெலா சோயா சங்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சில்லறை விலையை நாளை (திங்கள்கிழமை) முதல் குறைத்து, அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்க உள்ளது.நாளை முதல் நியூட்... மேலும் பார்க்க