செய்திகள் :

ஜிஎஸ்டி மாற்றமே இவர்களுக்குத்தான்! இன்று முதல் ஜாக்பாட்!!

post image

ஜிஎஸ்டி வரி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமே வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்கானது என்று சொல்லும் அளவுக்கு இன்று முதல் பெரும்பாலான பொருள்களின் விலைகள் குறைந்துள்ளன.

இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்தில் அத்தியாவசிய பொருள்களுக்கு 5 சதவிகிதம், அடிப்படையான சரக்கு மற்றும் சேவைகளுக்கு 18 சதவிகிதம், சொகுசு மற்றும் ஆடம்பர பொருள்களுக்கு 40 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, மூன்று எளிமையான வரி அமைப்புக்குள் நாட்டின் வரி முறை கொண்டுவரப்பட்டுவிட்டது.

இந்த மாற்றத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருப்பது மின்னணுத் துறை. முன்பு 28 சதவிகித வரி விதிக்கப்பட்ட குளிர்சாதன கருவி, குளிர்பதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் மற்றும் பெரிய திரைகளைக்கொண்ட தொலைக்காட்சிகள் போன்ற சாதனங்கள் இதுவரை 28 சதவிகிதத்திலிருந்து இப்போது 18 சதவிகிதமாகக் குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.

இதனால், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க திட்டமிட்டிருந்த மக்களுக்கு சில ஆயிரங்கள் வரை மிச்சமாகும் என கூறப்படுகிறது.

ஆனால், அனைத்து மின்னணு சாதனங்களும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் 18% நிலையான வரி வரம்பிலேயே உள்ளன, இதனால் அவற்றின் விலைகள் பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளன.

இந்த சாதனங்களின் விலை குறையுமா என்று எதிர்பார்ப்பவர்கள், பண்டிகைக் கால சலுகைகளுக்காகத்தான் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை.

அடுத்து, 12 சதவிகிதமாக இருந்த விடுதிக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாகக் குறைந்திருப்பதால், ரூ.7500 வரை கட்டணம் கொண்ட தங்கும் விடுதி அறைகள் வாடகை ரூ.525 வரை குறைகிறது.

விலைக் குறைப்புடன், ஆடம்பரப் பொருள்களுக்கான வரி 40 சதவிகிதம் என உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருள்கள் 28 சதவிகித வரியுடன் சேர்த்து செஸ் வரி விதிக்கப்படும்.

எச்1பி விசா எதிரொலி! ஐடி பங்குகள் சரிவுடன் வர்த்தகம்!

இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவுடன் 82,175 ப... மேலும் பார்க்க

செப்டம்பரில் ரூ.7,945 கோடியை வெளியேற்றிய அந்நிய முதலீட்டாளர்கள்!

புது தில்லி: உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர் புவிசார் அரசியல் பதட்டங்களால், அந்நிய முதலீட்டாளர்கள் செப்டம்பர் மாதம் ரூ.7,945 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் ரூ.34,990 கோடியும்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!

புது தில்லி: பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட், நியூட்ரெலா சோயா சங்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சில்லறை விலையை நாளை (திங்கள்கிழமை) முதல் குறைத்து, அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்க உள்ளது.நாளை முதல் நியூட்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி எதிரொலி: பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை குறைத்த அமுல் நிர்வாகம்!

புதுதில்லி: நாட்டின் மிகவும் பிரபலமான பால் பிராண்டுகளில் ஒன்றான 'அமுல்' பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நெய், வெண்ணெய் ஐஸ்கிரீம், பேக... மேலும் பார்க்க

மும்பையில் ரூ.500 கோடிக்கு நிலம் வாங்கிய எஸ்.டி.டி குளோபல் டேட்டா நிறுவனம்!

புது தில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ், மும்பையில் 24 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி.டி குளோபல் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.500 கோடிக்கு விற்றுள்ளது.சிங்கப்பூ... மேலும் பார்க்க