செய்திகள் :

OG: ரூ.1,29,999-க்கு விற்கப்பட்ட ஒரு டிக்கெட்; பவன் கல்யாண் ரசிகரின் 'அதிர்ச்சி' சம்பவம்

post image

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் `ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் 'ஒஜி' திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மீது பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

செப்டம்பர் 25 தசரா பண்டிகை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்துக்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.

OG - பவன் கல்யாண்
OG - பவன் கல்யாண்

இந்தப் படத்துக்கு ஆந்திர மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், ஓஜி திரைப்படம் செப்டம்பர் 25 அன்று அதிகாலை 1 மணிக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்புக் காட்சிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 25 முதல் 4 நாள்களுக்கு தனித் திரையரங்குக்கு ரூ.125 என்றும், மல்டிபிளக்ஸ் திரையரங்குக்கு ரூ.150 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த விலை உயர்வு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் ஓஜி திரைப்படத்துக்கான டிக்கெட்டை 1,29,999 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், ஆந்திரா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பலில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டரில், ஓஜி படத்தின் 25 செப்டம்பர் அதிகாலை 1 மணி காட்சிக்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டது.

OG - பவன் கல்யாண்
OG - பவன் கல்யாண்

ரூ.1000-த்தில் தொடங்கிய ஏலம் சௌட்டுப்பால் மண்டலத்தின் லக்காரம் கிராமத்தைச் சேர்ந்த அமுதலா பரமேஷ் என்ற ரசிகரால் முடிவுக்கு வந்தது.

இவர்தான் ஓஜி படத்துக்கான டிக்கெட்டை ரூ.1,29,999-க்கு வாங்கியிருக்கிறார். இந்த ஏலத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சிக்கு (ஜேஎஸ்பி) நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

OG: மேடையிலேயே வாளை சுழற்றிய பவன் கல்யாண்; சில நொடிகளில் சுதாரித்த பவுண்ஸர்! - வைரல் வீடியோ

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தராததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நட... மேலும் பார்க்க

Kalki 2898 AD படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்: காரணம் என்ன?

கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்த... மேலும் பார்க்க

Anushka: "அருந்ததிக்குப் பிறகு வானம் படக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்" - அனுஷ்கா

இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் 'காட்டி' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்காக அனுஷ்கா அளித்த நேர்காணலில் தன்னுடைய தொடக்கக் கால... மேலும் பார்க்க

Mirai: "மதம் சார்ந்த படங்களிலேயே நடிக்கிறீர்களே?" - பத்திரிகையாளர்கள் கேள்விக்கு தேஜா சஜ்ஜா பதில்

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் 'மிராய்'. பான் இந்தியா மூவியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்... மேலும் பார்க்க

Balayya: "பாலய்யா பன்ச், POSITIVITY" - சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பாலய்யா; வாழ்த்திய ரஜினி!

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா), தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு படத்திற்கான விரு... மேலும் பார்க்க

Allu Family: அல்லு அர்ஜூன் , ராம் சரணின் பாட்டி அல்லு கனகரத்னம் காலமானார்!

நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தைவழிப் பாட்டியும் ராம் சரணின் தாய்வழிப் பாட்டியுமான அல்லு கனகரத்னம் இன்று காலை ஹைதராபாத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு 94 வயது. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு ... மேலும் பார்க்க