செய்திகள் :

1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

post image

தமிழகத்தில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 75 துணை செவிலியர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் இன்று வழங்கப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

MK stalin issues appointment orders to 1,231 village nurses

இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜிஎஸ்டி குறைப்புக்கு பிறகும் ஆவின் விலை குறைக்கபடாதது ஏன்?

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகும் ஆவின் பொருள்களின் விலையை தமிழக அரசு குறைக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று மு... மேலும் பார்க்க

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்; அவருக்குப் பின்னால் பாஜக இருக்கிறது: அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அகந்தையுடன் பேசுவதாகவும் அவருக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்ளுடன் பேசி அவர், "தவெக தலைவர் விஜய்க்கு... மேலும் பார்க்க

விஜய் சுற்றுப் பயணத்தில் மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இந்த வார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வருகின்ற 27 ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்வார் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

சின்னமனூரில் விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சின்னமனூரில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்... மேலும் பார்க்க

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை பொதுப் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் சென்னை ஒன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.இந்த செயலியில் புறப்படும் இடத்தையும் சென்றுசேரும் இடத்தையும் குற... மேலும் பார்க்க

விஜய்க்கு பிரமாண்ட மாலை: 4 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர்... மேலும் பார்க்க