TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" - ...
H-1B விசா சர்ச்சை: சீனா K விசா அறிமுகம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இப்படியான சூழலில் H-1B விசா மாதிரியான புது விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது சீனா.
அமெரிக்கா: H-1B விசா பிரச்னை
H-1B விசா என்பது அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளில் எக்ஸ்பெர்டாக இருக்கும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா வழங்கும் விசா ஆகும். பிறநாட்டு திறமையாளர்களை அமெரிக்காவின் வளர்ச்சிகாக பயன்படுத்திக் கொள்ள 1990 ஆம் ஆண்டு இந்த விசா அறிமுகப்படுத்தியது.
முதலாம் புஷ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசாவினை, தீவிர வலதுசாரிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கவே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது அவர்கள் வாதம்.
அதாவது அமெரிக்கர்களைவிட குறைந்த ஊதியத்தில் பணியாற்ற வெளிநாட்டினர் தயாராக இருக்கும் போது, அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுக்கே முன்னுரிமை தருகின்றன என்பது அவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டு.
மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை
தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் ஆகியவற்றின் நேர்மறை தாக்கங்கள் உச்சத்தில் இருந்த போது வெளிநாட்டினருக்கு அமெரிக்கா சொர்க்க பூமியாக இருந்தது. ஆனால், கடந்த சல ஆண்டுகளாக குறிப்பாக கோவிட் தொற்றுக்கு முன்பாக உலகம் புதிய ஒழுங்கிற்கு தயாரானது. பல்வேறு நாடுகளில் மண்ணின் மக்களுக்கே வேலை என குரல்கள் ஒலிக்க தொடங்கின.
இதை முன்வைத்தே அமெரிக்காவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ட்ரம்ப்.
இப்படியான சூழலில் ட்ரம்ப் H1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தி செக் வைத்துள்ளார்.
பல நாட்டினர் இதனால் பாதிக்கப்பட்டலும், இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியர்கள். H1B விசா வைத்திருப்பவர்களில் 70 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.
ஏற்கெனவே H1B விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அங்கு ஒரு நிச்சயமின்மை நிலவுவதை மறுப்பதற்கு இல்லை.
இப்படியான சூழலில் சீனா தற்போது K விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

யார் K விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்?
இந்த விசா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளைஞர்களுக்கான விசாவாக எடுத்துகொள்ளலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங் மற்றும் கணிதம் பட்டதாரிகள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் இந்தத் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த விசாவிற்கான நபர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இந்த விசா பெறுவதற்கு சீன நிறுவனங்கள் தான் விண்ணப்பதாரருக்கு உதவ வேண்டும் என்பதில்லை. அவர்களாகவே K விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் வயது, கல்வி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

K விசா சிறப்புகள்
தற்போது உள்ள 12 சாதாரண சீனா விசா வகைகளுடன் ஒப்பிடுகையில், K விசா வைத்திருப்போருக்கு அனுமதிக்கப்பட்ட நுழைவுகளின் எண்ணிக்கை, விசாவின் செல்லுபடியாகும் காலம் மற்றும் தங்கும் காலம் ஆகியவற்றில் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிற்குள் நுழைந்த பிறகு, K விசா வைத்திருப்போர் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவதோடு, இது தொடர்புடைய தொழில் திட்டங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.
சர்வதேச பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக விசா விதிகளை எளிமைப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பீஜிங் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அமைகிறது.
பீஜிங் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு உலகம் முழுவதும் உள்ள திறமைசாலிகளின் பங்கேற்பு மிக அவசியம் என்று கூறி உள்ளது.
மேலும், சீனாவின் முன்னேற்றம் அவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு இளம் அறிவியல் தொழில்நுட்ப நிபுணர்கள் சீனாவிற்கு வருவதை எளிமையாக்கவும், இளம் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் சீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சீனாவின் முயற்சி
ஜூலை மாத இறுதி நிலவரப்படி, சீனா 75 நாடுகளுடன் விசா விலக்கு ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விசா தளர்வுகளால் சீனாவுக்கு அதிகளவில் சர்வதேச பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.
பீஜிங்கின் தேசிய குடியேற்ற நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு 3.805 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 30.2 சதவீதம் அதிகம். அதில் 1.364 கோடி பயணங்கள் விசா-இல்லா நுழைவுகளாக இருந்தன.
இது கடந்தாண்டின் இதேகாலத்தை ஒப்பிடுகையில் 53.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
K விசா மற்றும் சீனாவின் புதிய விதிகள் (FAQ)
K விசா என்றால் என்ன?
K விசா என்பது சீனாவின் புதிய விசா வகையாகும், குறிப்பாக இளம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை (young sci-tech professionals) ஈர்க்க இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
K விசாவை பெற என்ன நிபந்தனைகள் உள்ளன?
• சீனாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.முக்கியமாக, வெளிநாட்டில் இருந்து K விசா விண்ணப்பிப்பதற்கு சீன நாட்டு நிறுவனகளின் அழைப்பு (invitation) தேவைப்படாது.
K விசா வழங்கும் வசதிகள் என்னென்ன?
• பல-முறை நுழைவு (multiple entries) அனுமதி உள்ளது. விசா செல்லுபடியாகும் கால அவகாசம் (validity period) மற்றும் estancia-காலம் (duration of stay) அதிகமாக இருக்கும்.
இந்த விதிகள் எப்போது அமலுக்கு வரும்?
இவை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1-இல் நடைமுறையடையும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய K விசா சர்வதேச அளவில் என்ன விளைவுகள் ஏற்படும்?
• சீனாவுக்கு வெளிநாட்டு இளம் அறிவியல்-தொழில்நுட்ப நிபுணர்கள் செல்வது அதிகரிக்கும்.பிற நாடுகளில் விசா கட்டண உயர்வு (அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு) காரணமாக இது இந்திய இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்