செய்திகள் :

பாமக: `கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில்தான் நடக்கும்!’ – எம்.எல்.ஏ அருள் சொல்வதென்ன ?

post image

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நாளை பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நேற்று உயர்மட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ அருள், வன்னியர் சங்க மாநில செயலாளர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ அருள், ``தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்தோம்.

ராமதாஸ், அன்புமணி

கூட்டணி அமைப்பதற்கு நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழுவால் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு, ஏற்கெனவே அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ராமதாஸ் அவர்கள்தான் முடிவு செய்வார். வருகின்ற 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ராமதாஸ் அவர்கள் விரைவில் அறிவிப்பார். அதேபோல கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விரைவில் தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸ் அவர்களைச் சந்திப்பார்கள்.

அன்புமணி தரப்பில் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்துத் தரக்கோரிய கடிதத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாக தேர்தல் ஆணையத்திடம் பொய் தகவல் கூறியிருக்கின்றனர்.

பா.ம.க-வைப் பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கட்சி இல்லை. முகவரி மாற்றம் பொய்யானது என தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருக்கிறோம். அன்புமணி தரப்பினர் கோயபல்ஸ் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் ராமதாஸ் இல்லாமல் பா.ம.க-வின் வாக்குகளைப் பெற முடியாது. பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் என்று தேர்தல் ஆணையம் எங்கும் கூறவில்லை.

ராமதாஸ்

தேர்தல் ஆணையம் தவறு செய்யாது என்று நம்புகிறோம். அப்படியே தவறு செய்தாலும் அதையும் சட்டப்படி சந்திப்போம். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தைலாபுரம் வந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்திப்பதுதான் வழக்கம்.

மருத்துவர் ராமதாஸ் கைகாட்டுபவர்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இருப்பார்” என்றார். சேலம் எம்.எல்.ஏ அருளை பா.ம.க-வின் தலைமை நிலைய செய்தித் தொடர்பாளராக மருத்துவர் நியமித்திருக்கும் நிலையில், அருள் செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

TVK: "விஜய்க்குக் கூடிய கூட்டத்தைவிட நடிகர் அஜித்துக்கு இரண்டு மடங்கு கூடும்" - ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தொடர்ந்து மாநாடு, அறிக்கைகள் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை `உங்க விஜய் நா... மேலும் பார்க்க

'யோவ் இங்க பாரு'- கடுப்பான திருச்சி சிவா; மன்னிப்பு கேட்ட செந்தில் பாலாஜி - வைரலாகும் வீடியோ

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.20) அன்று திமுகவின் ஓர் அணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற... மேலும் பார்க்க

H-1B விசா சர்ச்சை: சீனா K விசா அறிமுகம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தியது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில் H-1B விசா மாதிரியான புது விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது சீனா.அமெரிக்க... மேலும் பார்க்க

`அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!’ - அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு' தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல... மேலும் பார்க்க

'சிரஞ்சீவி, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுது? இதெல்லாம்'- செல்லூர் ராஜு

சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியிருக்கிறார். இதுதொடர்பாக நேற்று(செப்.21) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ர... மேலும் பார்க்க