பிரம்ம ராட்சசன்... காந்தாரா சேப்டர் 1 டிரைலர்!
காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நிலவுரிமை பிரச்னைகளைத் தொட்டு கதை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: கிஸ், சக்தித் திருமகன் வசூல் எவ்வளவு?
காட்சியமைப்புகளும் இசையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் காந்தாரா சேப்டர் 1 மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.