"பாலிவுட்டில் கேமராமேனாகப் பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன்; காரணம்" - நட்ரா...
கிஸ், சக்தித் திருமகன் வசூல் எவ்வளவு?
கிஸ், சக்தித் திருமகன் திரைப்படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான சக்தித் திருமகன் மற்றும் நடிகர் கவினின் கிஸ் திரைப்படங்கள் கடந்த செப்.19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், நல்ல விமர்சனங்களைப் பெற்ற சக்தித் திருமகன் இதுவரை ரூ. 3.65 கோடியையும் (தெலுங்கும் சேர்த்து) கலவையான விமர்சனங்களைப் பெற்ற கிஸ் திரைப்படம் ரூ. 1.6 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில் பழங்குடியினரின் வலிகளைப் பேசும் படமாக உருவான தண்டகாரண்யம் திரைப்படம் ரூ. 65 லட்சம் வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் பெரிய படங்களின் வெளியீடு இல்லையென்றாலும் சுமாரான வசூலையே இப்படங்கள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிடைத்த கௌரவம் - மோகன்லால் நெகிழ்ச்சி!