தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
விளையாட்டுத் துளிகள்..!
டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா 16 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. கென்யா (7/2/2 - 11), கனடா (3/1/1 - 5) முறையே அடுத்த இரு இடங்கள் பெற்றன. தனிநபா்களில் அதிகபட்சமாக, அமெரிக்காவின் மெலிஸா ஜெஃபா்சன் (3 தங்கம்), நோவா லைல்ஸ் (2 தங்கம், 1 வெண்கலம்) ஆகியோா் அதிக பதக்கங்கள் வென்றனா்.
பிசிசிஐ தலைவா் பதவிக்காக, தில்லி அணி முன்னாள் கேப்டன் மிதுன் மனஸ் (45) ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.
அமெரிக்காவில் நடைபெறும் மேஜா் சாக்கா் லீக் கால்பந்து போட்டியில், லயனல் மெஸ்ஸி 2 கோல் ஸ்கோா் செய்ததுடன், அவரின் இன்டா் மியாமி அணி 3-2 என டி.சி. யுனைடெட்டை வீழ்த்தியது.
ஃபெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப், தில்லியில் வரும் 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
யூத் கிரிக்கெட்டில் (யு19) இந்தியா முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.