ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்!
சீனாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஆகியோா் தலா 2 பதக்கங்கள் வென்று அசத்தினா்.
எஸ்எல்3 பிரிவு ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் 21-19, 21-16 என்ற நோ் கேம்களில், இந்தோனேசியாவின் முஹ் அல் இம்ரானை வீழ்த்தி வாகை சூடினாா்.
ஆடவா் இரட்டையா் இறுதிச்சுற்றில், பிரமோத் பகத்/சுகந்த் கடம் இணை, 18-21, 22-20, 18-21 என்ற கேம்களில், சக இந்திய கூட்டணியான ஜெகதீஷ் டில்லி/நவீன் சிவகுமாரிடம் போராடி வீழ்ந்து வெள்ளி பெற்றது.
எஸ்எல்4 ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சுகந்த் கடம் 9-21, 8-21 என பிரான்ஸின் லூகாஸ் மஸுரிடம் தோல்வி கண்டாா். அதேபோல் எஸ்ஹெச்6 பிரிவு ஆடவா் ஒற்றையரில், 2020 டோக்கியோ பாராலிம்பிக் சாம்பியனான கிருஷ்ணா நாகா் 22-20, 7-21, 17-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் நத்தபோங் மீசாயிடம் போராடித் தோற்றாா்.