Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்ன...
Kingmakers IAS Academy: "நம் பண்புகளும், நம் உழைப்பும் நம்மை உயரச் செய்யும்" - ராம்நாத் கோவிந்த்
சாதாரண இளைஞர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் தனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, கிங்மேக்கர்ஸ் ஐஏஸ் அக்காடமி (Kingmakers IAS Academy) சென்னை அண்ணா நகரில் தனது புதிய வளாகத்தை செப்டம்பர் 21 அன்று திறந்து வைத்தது.
சிறப்பு விருந்தினர்களாக விழாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், மாநிலங்களவை உறுப்பினர் தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் G.K வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

12 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது கிங்மேக்கர்ஸ் அக்காடமி. இரண்டு அனைத்திந்திய டாப்பர்கள் மற்றும் ஐந்து தமிழ்நாடு டாப்பர்களை உருவாக்கியுள்ளது.
பெனோ ஜெஃபின், இந்தியாவின் முதல் பார்வையற்ற IFS அதிகாரியை உருவாக்கிய பெருமையும் இந்த அக்காடமியைச் சேரும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கைதூக்கி விடுகின்ற அகாடமியாக கிங்மேக்ர்ஸ் அக்காடமி திகழ்கிறது.
நிகழ்வில் கலந்துக்கொண்ட திரு.G.K வாசன், அக்காடமி மற்றும் அக்காடமியின் நிறுவனர் பூமிநாதனை வாழ்த்தினார்.
“எனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம் இந்த அக்காடமியின் பெயர், கிங்மேக்கர் என்பதாகும். இந்தியாவின் முன்று பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜர் கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்டார். எனவே மாணவர்கள் அனைவரும் காமராஜர் அவர்களின் நேர்மை, எளிமை, தூய்மையைக் கடைபிடியுங்கள்.
அவ்வாறு கடைபிடிக்கின்றபோது நீங்கள் நிச்சயம் உயர்ந்தநிலைக்கு வருவீர்கள்” என்று பெருந்தலைவர் காமராஜரை அவரது உரையில் நினைவுகூர்ந்து மாணவர்களை வாழ்த்தி விடைபெற்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பேசும்போது, “சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது அரசின் பொறுப்புகளுக்கு மனதைத் தயார்படுத்திக்கொள்வதேயாகும்” என்றார்.
மேலும், ஒரு சிறந்த அதிகாரியின் பண்புகளைப் பற்றி பேசிய அவர், "அரசு அதிகாரியாக இருப்பவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு நீதியை வழங்குகின்ற வகையிலும், அவர்களது கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கின்ற வகையிலும் செயல்படுவதோடு, அனைத்து மக்களுக்குமான நம்பிக்கையைத் தருகின்ற ஒருவராகவும் இருக்க வேண்டும்' என்று கூறி, தனது வாழ்கை பயணத்தைப் பற்றி பேசத் துவங்கினார்.
“நானும் ஐஏஸ் ஆகும் கனவு கொண்டிருந்தேன், எனது கிராமத்தை விட்டு, டெல்லியில் இது போன்ற அக்காடமியில் சேர்ந்தேன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐஏஏஸ் (IAAS- Indian Audit and Accounts Service) அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
27 வயது இருக்கும்போது முன்னாள் பிரதமர் மோராஜி தேசாய் அவர்களுடன் விமானத்தில் பயணிக்கும் வாய்பு எனக்குக் கிடைத்தது, அப்பொழுது, இந்திய அரசியல் மீது குவிந்திருந்த கவர்ச்சி என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பின்பு, 1991 இல் தேர்தல் அரசியலில் பங்கேற்றேன்.




இரண்டு வருடங்களில் நாடாளுமன்ற உறுப்பினரானேன். அதைத் தொடர்ந்து இரண்டு முறை அந்தப் பொறுப்பை வகித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தின் கவர்னர் ஆனேன். அவ்வாறான எனது அரசியல் பயணத்தின் நிறைவாக இந்தச் சிறப்பான நாட்டிற்கு குடியரசுத் தலைவரானேன்.
எனவே இந்தத் தேர்வு முக்கியம் இல்லை, தேர்விற்குத் தயாராகும் போது நீங்கள் கற்றுக்கொள்ளும் பண்புகள், உங்களின் கடுமையான உழைப்பு ஆகியவை எந்தத் துறைக்கு நீங்கள் சென்றாலும் உங்களைச் சிறந்து விளங்கச் செய்யும்” என்று கூறினார்.
முன்னதாக கிங்மேக்கர்ஸ் அகாடமி மென்மேலும் வளர்ந்து சிறப்புற வேண்டுமென வாழ்த்தினார்.