செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தின் 8 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை

post image

மத்தியப் பிரதேசத்தின் 8 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் உள்ள விவசாய வயலில் சிறுமி கீதாவின் தாயும் மற்ற தொழிலாளர்களும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுத்தை சிறுமி கீதாவின் கழுத்தைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றது.

உடனே சிறுமியின் தாயும் மற்றவர்களும் சத்தம் எழுப்பி காட்டு சிறுத்தையை துரத்தினர்.

பின்னர் அந்த சிறுத்தை சிறுமியை விட்டுவிட்டு அருகிலுள்ள காட்டுக்குள் ஓடியது. காயமடைந்த சிறுமியை சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அச்சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வன அதிகாரி ஆஷிஷ் பன்சோட் தெரிவித்தார்.

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

வனத்துறையின் ரோந்து குழுக்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சிறுத்தையை கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பன்சோட் மேலும் தெரிவித்தார்.

கடந்த 35 நாள்களில் இப்பகுதியில் சிறுத்தைகளால் ஏற்படும் இரண்டாவது மனித மரணம் இதுவாகும்.

A leopard killed an 8-year-old girl in front of her mother in an agricultural field in Madhya Pradesh's Barwani district on Sunday, officials said.

இன்று முதல் ஜிஎஸ்டி 2.0! ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல்!

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இதுவரை ஜிஎஸ்டி வரியுடன் வாங்கி வந்த சில பொருள்கள் இனி பூஜ்ய வரியில் விற்கப்படும்.ஜிஎஸ்டி... மேலும் பார்க்க

பெண் தோழியைக் கொன்ற இளைஞர் சிக்கியது எப்படி?காட்டிக்கொடுத்த செல்ஃபி!

உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம், அகன்ஷா இருவருக்கும் இடையே இன்ஸ்டா மூ... மேலும் பார்க்க

கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல்

மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சி... மேலும் பார்க்க

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க

எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சியில் ட்ரோன் இணைப்பு!

எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பயிற்சித் திட்டத்தில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) போா்முறை பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் நடை... மேலும் பார்க்க