செய்திகள் :

இன்று முதல் ஜிஎஸ்டி 2.0! ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல்!

post image

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், இதுவரை ஜிஎஸ்டி வரியுடன் வாங்கி வந்த சில பொருள்கள் இனி பூஜ்ய வரியில் விற்கப்படும்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் கடந்த செப்.3ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக, பல உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்குப் பெறுகின்றன.

வரி விலக்கு காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், காக்ரா, பிட்சா ரொட்டி, பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை குறைகிறது.

மேலும், தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

முதல்படியாக, இந்திய ரயில்வேயில் விற்பனை செய்யப்படும் ரயில் நீர் இன்று முதல் ரூ.15லிருந்து ரூ.14க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரை லிட்டர் குடிநீர் பாட்டில் விலையும் ரூ.10ல் இருந்து ரூ.9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

5 சதவீத வரியில்.. வெண்ணெய், நெய், உலர் பழங்கள், சீஸ், இறைச்சி, ஜாம், கெட்ச்சப், பிஸ்கட், காஃபி, பழச்சாறுகள், சோயா பால் போன்றவற்றுக்கு 5 சதவீத வரி விதிப்பு காரணமாக விலை குறைகிறது.

பற்பொடி, பால் பாட்டில், குடைகள், சைக்கிள், சீப்பு உள்ளிட்ட நுகா்வோா் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒன்றல்ல.. இரண்டல்... 391 பொருள்கள் மீதான வரியில் மாற்றம்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி சீா்திருத்தம் என்பது, முன்பு 5, 12, 18, 28 சதவீதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது 5 சதவீதம் (அத்தியாவசிய மற்றும் அடிப்படை பொருள்களுக்கு), 18 சதவீதம் (மற்ற சரக்கு மற்றும் சேவைகளுக்கு) என எளிதாக்கப்பட்டுள்ளது.

இதனால், 391 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிகங்கள் மாற்றப்பட்ட நிலையில், அவற்றில் 357 பொருள்களுக்குத் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி குறைந்திருக்கிறது.

விலை குறையும் டிவிஎஸ் வாகனங்கள்

ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்க டிவிஎஸ் மோட்டார் முடிவு செய்துள்ளது. அதற்காக, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் இயங்கும் தங்கள் நிறுவன வாகனங்களின் விலைகளை 28 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை குறைக்கவிருப்பதாகவும் இது இன்று முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் அறிவித்திருந்தது.

மஹிந்திரா & மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) வாகனங்களின் விலை 1.56 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொலேரோ/நியோ ரகங்களின் விலை ரூ.1.27 லட்சம், எக்யுவி3எக்ஓ (பெட்ரோல்) விலை ரூ.1.4 லட்சம், தாா் 2டபிள்யுடி (டீசல்) விலை ரூ.1.35 லட்சம் குறையும். மேலும், ஸ்காா்பியோ கிளாசிக்கின் விலை ரூ.1.01 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ்

மத்திய நிதியமைச்சகத்தின் முடிவுக்குபடி ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் 65,000 முதல் 1.45 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. அதாவது, டியாகோவின் விலை ரூ.75,000, டிகோரின் விலை ரூ.80,000, ஆல்ட்ராஸின் விலை ரூ.1.10 லட்சம் குறைகிறது. மேலும், பஞ்ச் எஸ்யுவியின் விலை ரூ,85,000, நெக்ஸானின் விலை ரூ.1.55 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் எஸ்யூவிகளான ஹாரியா் மற்றும் சஃபாரி வாகனங்களின் விலைக் குறைப்பு முறையே ரு.1.4 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சமாக இருக்கிறது.

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு சிலைகள்!

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் 2 பாம்பு சிலைகள் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம், அழிக்கோடு அருகேயுள்ள புதிய கடப்புரத்தில் வசித்து வருபவர் ரஸ்ஸல். இவர் ஞாயிற்றுக்கிழமை வடக்குப் பக... மேலும் பார்க்க

பெண் தோழியைக் கொன்ற இளைஞர் சிக்கியது எப்படி?காட்டிக்கொடுத்த செல்ஃபி!

உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் துரோகத்திலும் கொடூரமான கொலையிலும் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம், அகன்ஷா இருவருக்கும் இடையே இன்ஸ்டா மூ... மேலும் பார்க்க

கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல்

மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சி... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தின் 8 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை

மத்தியப் பிரதேசத்தின் 8 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் உள்ள விவசாய வயலில் சிறுமி கீதாவின் தாயும் மற்ற தொழிலாளர்களும்... மேலும் பார்க்க

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புர... மேலும் பார்க்க