சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் வெளியிட்ட விடியோ!
ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.83 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று செப்டம்பர் 22ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம்
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.8,580க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் 148 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,48,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.