செய்திகள் :

பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர்

post image

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கோரி நீண்ட காலமாக இஸ்ரேல் அரசுடன் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இதனிடையே, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது.

தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காஸாவில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றிய இஸ்ரேல் ராணுவம், தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வழங்கப்படும்.

அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது.

பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்.

இதனை நாங்கள் உறுதியுடன் செய்து வருகின்றோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Israeli Prime Minister Benjamin Netanyahu said on Monday that there will be no state called Palestine.

இதையும் படிக்க : பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!

நேபாள சிறையில் இருந்து தப்பிய 5 போ் பிகாரில் கைது

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பிகாரில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வெளிநாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி என்ற மிகக் குறைந்த விகிதத்தில் பாகிஸ்தானுக்கு அந்நாடு கடன் வழங்கி வருகி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

பிலிப்பின்ஸ் நாட்டின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வரலாற்றுச் சிறப்புமிக்க மணிலா பூங்கா மற்றும் இஎஸ்... மேலும் பார்க்க

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்கள் நியமனம்: இன்று பதவியேற்பு!

நேபாளத்தில் மேலும் 5 புதிய அமைச்சா்களை அந்நாட்டு அதிபா் ராமசந்திர பெளடேல் நியமித்தாா். 5 பேரும் திங்கள்கிழமை (செப்.22) பதவியேற்க உள்ளனா். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் தீவிர போ... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டணம்: ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும்! - வெள்ளை மாளிகை

உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (ஒரு லட்சம் டாலா்) புதிய விண்ணப்பதாரா்கள் ஒருமுறை மட்டுமே செலுத்தினால் போதுமானது என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் டெய்லா... மேலும் பார்க்க

டிரம்ப் கோரிக்கை: மீண்டும் நிராகரித்தது தலிபான்!

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை அமெரிக்க கட்டுப்பாட்டில் மீண்டும் வழங்க வேண்டும் என்ற அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை தலிபான் அரசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிர... மேலும் பார்க்க