பாமக: `கூட்டணி பேச்சுவார்த்தை தைலாபுரத்தில்தான் நடக்கும்!’ – எம்.எல்.ஏ அருள் சொல...
விஜய்க்கு பிரமாண்ட மாலை: 4 பேர் மீது வழக்கு பதிவு
திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் தவெக நிர்வாகிகளும் கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அந்த மாலையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இதுதொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.