செய்திகள் :

Vijay Antony: ``ஜனநாயகத்தில் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?"- கேள்வி எழுப்பிய விஜய் ஆண்டனி

post image

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி, நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார்.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

Vijay Antony
Vijay Antony

இவரின் 25-வது படமாக உருவான சக்தித் திருமகன், அரசியல் பின்னணியில், த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி, ``மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கம், எல்லா கட்சிகாரர்களிடமும் இருக்கிறது.

ஒரு பகுதியில் குப்பை இருக்கிறது என்றால், அதை அவர்தான் எடுக்க வேண்டும், இவர்தான் எடுக்க வேண்டும் என்பதில்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் செல்கிறார்கள் என்றால் அது நல்லதுதானே.

நாம் ஏன் அவர்களுக்குள் விரோதத்தையும், போட்டியாளராகவும் பார்க்க வேண்டும். ஒருவரை தாழ்த்தியும், உயர்த்தியும் ஏன் பேச வேண்டும்?

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கருதும் அனைத்துக் கட்சிகள் மீதும், எனக்கு உயரிய கருத்துதான் இருக்கிறது. நடிகர் விஜய்யுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் நோக்கமெல்லாம் இப்போது இல்லை.

vijay antony | விஜய் ஆண்டனி
vijay antony | விஜய் ஆண்டனி

எனக்கு எல்லா கட்சியும் பிடிக்கும். அதனால், நான் எல்லா கட்சியுடனும் இணைந்திடலாமா? அதற்கு ஜனநாயகத்தில் வாய்ப்பிருக்கிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் என்கிறபோது, எல்லோரும் நல்லவர்கள்தானே.

எனவே ஒவ்வொருவரும் நல்லது செய்யும்போது அவர்களை வரவேற்று வாழ்த்துகிறோம். கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள் என்றால், அது அவர்களின் கருத்து. என்னை பொறுத்தவரை எல்லா அரசும் நன்றாகவே செயல்படுகிறது" என்றார்.

Shakthi Thirumagan: ``மத்திய மாநில அரசு தந்த ஒத்துழைப்பிற்கு நன்றி'' - கோவையில் விஜய் ஆண்டனி

இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள `சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழுவினர், படத்திற்கு ... மேலும் பார்க்க

Meenakshi Chaudhary: ``அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு" - மீனாட்சி சௌத்ரி கிளிக்ஸ் | Photo Album

Priyankaa Mohan: `அழகியே அரக்கியே' - பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!| Photo Albumசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூ... மேலும் பார்க்க

Priyankaa Mohan: `அழகியே அரக்கியே' - பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!| Photo Album

Priyanka Mohan: "சம்பவம் பண்ணுற ஹார்ட்டுக்குள்ள நீ" - நடிகை பிரியங்கா மோகனின் க்ளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க

Kushi Re Release: `` குஷி கதை சொன்னதும் விஜய் சார் கொடுத்த ரியாக்‌ஷன்!" - எஸ்.ஜே சூர்யா

25 வருடங்களுக்குப் பிறகு 'குஷி' திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இதற்கு முன் ரீ-ரிலீஸில் விஜய்யின் 'கில்லி' அதிரடி காட்டி சொல்லியடித்தது. Kushi Re Releaseஅப்படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்... மேலும் பார்க்க

எம். ஆர். ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா மற்றும் நிரோஷாவின் தாயார் கீதா ராதா காலாமானார்!

நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நடிகை நிரோஷாவின் தாயாரும், நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா இன்று மாலை இயற்கை எய்தினார். இவருக்கு வயது 86.கீதா ராதாநடிகை நிரோஷா மற்றும் ராதிகா சரத்குமாரின்... மேலும் பார்க்க

Nadigar Sangam: ``வருமானங்களே கடனை அடைக்க வழியை அமைத்துக்கொடுக்கும்" - கார்த்தி சொன்ன பதில்

69-வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தொடங்கி தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.Nadigar Sangam... மேலும் பார்க்க