ரூ.100 கோடி கொள்ளையடித்த திருப்பதி கோயில் ஊழியர்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!
Kushi Re Release: `` குஷி கதை சொன்னதும் விஜய் சார் கொடுத்த ரியாக்ஷன்!" - எஸ்.ஜே சூர்யா
25 வருடங்களுக்குப் பிறகு 'குஷி' திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. இதற்கு முன் ரீ-ரிலீஸில் விஜய்யின் 'கில்லி' அதிரடி காட்டி சொல்லியடித்தது.

அப்படத்தின் ரீ-ரிலீஸ் வெற்றியைத் தொடர்ந்து 'குஷி' படத்தையும் மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம். மறுவெளியீட்டிற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், "மறுபடியும் இளைய தளபதியை பார்ப்பதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஏ.எம். ரத்னம் சார்தான் என்னை விஜய் சார்கிட்ட கதை சொல்றதுக்கு கூட்டிட்டுப் போனாரு.
படத்தின் கதையை நடிகர், உதவி இயக்குநர் தொடங்கி பலர்கிட்ட சொல்லும்போது படத்தின் காட்சிகள் அத்தனையும் என் மனசுக்குள்ள ஒரு லட்ச முறை ஓடியிருக்கும்.
ஆடியன்ஸ் ப்ரஷான மனநிலையில் வரும்போது ஒரு படத்தை பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனா, ஆடியன்ஸுக்கு இருக்கிற சர்ப்ரைஸ் ஒரு இயக்குநருக்கு இருக்காது.
ஆனா, இன்னைக்கு இந்த நிகழ்வுல 'குஷி' படத்தின் பாடல்களை பார்வையாளர்களில் ஒருவனாகக் கேட்டு நான் என்ஜாய் பண்ணினேன்.

இங்கேயே 'கட்டிப்பிடி டா' பாடலுக்கு ஒன்ஸ் மோர் கேட்கிறீங்க." என்றபடி சிரித்தவர், "இந்தப் பாடலுக்கு நான் 'செந்தமிழ் தேன்மொழியாய்' பாடலை மெலடியைதான் நான் ரெஃபரன்ஸாக தேவா சார்கிட்ட காமிச்சேன்.
இந்தப் படத்துக்கு அத்தனையும் அமைந்து வந்ததுனு சொல்லலாம். இந்தப் படத்தின் கதையை விஜய் சார் கேட்டுட்டு பெருசா ரியாக்ஷன் கொடுக்கல. நான்கூட அவருக்கு கதை பிடிக்கலனு நினைச்சு ரத்னம் சாரைப் பார்த்தேன்.
பிறகு, பிடிக்கலைனா நான் வேற கதை சொல்றேன்னு சொன்னேன். அதுக்கு அவர் 'ஏன், இது நல்லா தானே இருக்கு. இதுவே பண்ணுவோம்'னு சொன்னாரு. அதையே அவர் ரொம்ப அமைதியாகதான் சொன்னாரு." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...