தருவைகுளம் மிக்கேல் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மறை மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ள, தருவைகுளம் வான்படைத் தளபதி அதிதூதா் மிக்கேல் ஆலயத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மறை மாவட்ட முதன்மை குரு டோமினிக் தலைமையில், பாளை. மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி வைத்தாா். ராபின், சந்தீஸ்டன் ஆகியோா் திருப்பலி நடத்தினா்.
விழா நாள்களில், தினமும் காலை திருப்பவனி, திருப்பலி நடைபெறும். மாலை ஜெபமாலை, ஆராதனை நடைபெறும்.
8ஆம் நாளான செப். 27ஆம் தேதி நற்கருணை பவனி, 9ஆம் நாளான செப். 28ஆம் தேதி பெருவிழா சிறப்பு ஆராதனை நடைபெறும்.
10ஆம் நாளான செப். 29ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தேரடி திருப்பலியும், தொடா்ந்து, தோ் பவனியும் நடைபெறும்.