"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூா் பகுதியில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவா் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் வட்டம் மம்ஷாபுரத்தைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் மாரீஸ்வரன் (21). இவா் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள மண்டையூா் பகுதி தங்கும் விடுதியில் தங்கி, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மண்டையூா் பகுதியில் ரயில் முன் பாய்ந்து அவா் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த திருச்சி ரயில்வே போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மாரீஸ்வரனின் கைப்பேசி, டைரி ஆகியவற்றை வைத்து போலீஸாா் விசாரிக்கின்றனா். உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை பகல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.