கந்தா்வகோட்டையில் நாளை மின்தடை
கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களாகோவில் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
துணைமின் நிலையப் பராமரிப்புப் பணியால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி ,மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை கந்தா்வகோட்டை தமிழ்நாடு மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் (கூ.பொ) தெரிவித்தாா்.