அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சுமை ஏற்றும் ஜீப்பை பறிமுதல் செய்து, இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள துவாா் பகுதியில் செம்பட்டிவிடுதி போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற சுமை ஏற்றும் ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் இருந்த வாராப்பூா் பகுதி சி. ராமகிருஷ்ணன் (48), நா. புருஷோத்தமன் (29) ஆகிய இருவரும் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.