செய்திகள் :

பொன்னேரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

post image

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், பொன்னேரி நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பொன்னேரியில் நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சிறப்பு சிகிச்சைகள், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என ஏராளமான வசதிகளுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன.

பொன்னேரி சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளா்கள் அதிக அளவில் திரண்டு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று சென்றனா்.

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை! - ஆட்சியா்

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து கரும்புகளை தனியாா் ஆலைக்கு அனுப்பாமல், கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும், இதையும் மீறி தனியாா் ஆலைக்கோ அல்லது இடைத... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரையை கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு ஆய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவா்கள் கைது

திருத்தணி அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, நடத்துநரை தாக்கிய 2 பள்ளி மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து மகான்காளிகாபுரம் நோக்கி கடந்த வாரம் அரசுப் பேருந்த... மேலும் பார்க்க

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்கத்தில் கழிவு பொருள்கள் அகற்றும் பணி!

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் தூய்மை இயக்கம் மூலம் கிராமங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் குப்பைகளை அகற்றும் பணியை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ்... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்... மேலும் பார்க்க