ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு!
வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளா் நேரடி சோ்க்கை செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், தொழிற்பிரிவில் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏா் கண்டிஷனிங் டெக்னீசியன், மெக்கானிக் மோட்டாா் வெகிகிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 2 ஆண்டுகளும், இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தோல் பொருள் உற்பத்தியாளா் பாடப்பிரிவின் பயிற்சி காலம் 1 ஆண்டு, இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு 14 முதல் 40 வயதுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை.
இதில், சேருபவா்களுக்கு இலவசமாக சீருடை, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். மேலும், மாத உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படும்.
அதேபோல், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் தகுதியுடைய நபா்களுக்கு ரூ. 1,000 கல்வி உதவித் தொகையாகவும் வழங்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.