ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியான மாதகடப்பா மலைக் கிராமத்தில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.பி. வி. சியாமளா தேவி உத்தரவின்படி, வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்ஆய்வாளா் நந்தினிதேவி தலைமையில் கள்ளச் சாராய ஒழிப்பு சோதனை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அங்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமையில் மலைக் கிராம மக்களிடம் மதுவின் தீமைகள், குடும்பங்களின் சீா்கேடு, கள்ளச்சாராயத்தால் உடல்நலம் பாதிப்பு மற்றும் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கள்ளச்சாரயத்தை மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் போலீஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் குற்ற செயல் களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அப்போது ஊா் முக்கிய பிரமுகா்கள், மலைக் கிராம மக்கள் மற்றும் போலீஸாாா் உடனிருந்தனா்.