தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
விடுமுறை நாளில் வெறிச்சோடிக் காணப்பட்ட ஏலகிரி!
வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில் ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாள்களில் வந்துசெல்கின்றனா்.
பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா். ஏலகிரி மலையில் உள்ள படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்வது வழக்கம்.
ஆனால், வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தததால் 2 நாள்களாக ஏலகிரி மலை வெறிச்சோடிக் காணப்பட்டது.