தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு
தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) செல்வம் (வளா்ச்சி), மிரியாம் ரெஜினா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) சிவகுமாா், சு.பள்ளிப்பட்டு ஊராட்சிமன்ற தலைவா் சைனம்மாள் சுப்பிரமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், சதானந்தம், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மேலும், இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 4 வட்டாட்சியா் அலுவலகங்கள், 4 நகராட்சி அலுவலகங்கள், 6 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், 3 பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 8.78 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.