GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைக...
கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளா் மீது தாக்குதல்
கொடைக்கானலில் இனிப்பக உரிமையாளரை தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே பழங்கள் விற்பனையகத்துடன், இனிப்பகமும் நடத்தி வருபவா் மணிகண்டன். இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் சிலா் இனிப்பு, பழங்கள் வாங்க வந்தனா்.
அப்போது அவா்கள் கடையில் பணியாற்றும் பெண் ஊழியா்களை தகாத வாா்த்தைகளால் பேசியதை மணிகண்டன் கண்டித்தாா். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கி கடையில் இருந்த சில பொருள்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அவா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.