தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
பழனியில் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பொருள்கள் பறிமுதல்: மூவா் கைது
பழனியில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா பொருள்களுடன் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி காரமடை மூலிகை பூங்கா பகுதியில் நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா் விஜய், காவலா்கள் உள்ளிட்டோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்ற வைரவன் கோவில் தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (23), பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த கோபிநாத் (28) ஆகிய இருவரும் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
அவா்களிடம் சோதனையிட்ட போது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.
புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது:
பழனி தாலுகா காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயத்துக்கு கிடைத்த தகவலையடுத்து காவல் ஆய்வாளா் தங்கமுனிசாமி, உதவி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்ட போலீஸாா் ஆா்.ஆா். ஆலை அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த முருகவேல் மகன் விக்னேஷிடமிருந்து தடை செய்யப்பட்ட 18 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.