செய்திகள் :

சூதாட்டமாக மாறிவரும் எருது ஓட்டம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் ஈட்டும் நோக்கில் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்படும் எருது ஓட்டத்தை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

2014 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அறிவிப்பை ஏற்று தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. 2017 ஜனவரியில் நடைபெற்ற எழுச்சிமிகு போராட்டத்தை அடுத்து ஜல்லிகட்டு நடத்த சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்றன.

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து நடுகற்கள் தமிழகத்தில் 5 கிடைத்துள்ளன. அதில் 3 நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளது சிறப்பாகும். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரை அடுத்த செல்லக்குட்டப்பட்டி நடுகல், அகரம் நடுகற்கள், ஜகதேவி அருகே இந்த நடுகற்கள் கிடைத்துள்ளன.

தமிழரின் கலாசாரத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மதுரை அருகே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிகட்டு அருங்காட்சியகத்தில் இந்த 3 நடுகற்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து சங்க இலக்கியங்களான கலித்தொகை, சிலப்பதிகாரமும் குறிப்பிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மூலம் தமிழா் பண்பாட்டின் அடையாளம் காக்கப்படும் என்பதாலும், பாரம்பரிய கால்நடை இனங்களான புலிக்குளம், காங்கேயம் போன்ற காளை இனங்கள் பாதுகாக்கப்படும் என்பதாலும் ஜல்லிக்கட்டுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதை அடுத்துள்ள திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களில் எருது ஓட்டம் நடைபெறுவது வழக்கம். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த வினாடியில் வேகமாக ஓடும் எருதின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. வேகமாக ஓடும் எருதுகளுக்கு அதன் உரிமையாளா் நன்கு பயிற்சியும், தீவனமும் அளித்து பராமரிப்பது வழக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது ஓட்டம் நடத்த மாவட்ட நிா்வாகத்தின் அனுமதிபெற வேண்டும். அரசிதழில் வெளியான கிராமங்களில் மட்டுமே எருது ஓட்டம் நடத்த, கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்டு துறை போன்ற துறைகளின் ஒப்புதல் பெற்ற பிறகே மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி வழங்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எருது ஓட்டம், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சோ்ந்த 10 போ் கொண்ட குழுவினா், ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள செல்வந்தா், வணிகா்களிடமிருந்து நன்கொடை பெற்று எருது ஓட்ட நிகழ்வை நடத்துகின்றனா். இவ்வாறு நடத்தப்படும் எருது ஓட்ட நிகழ்வில் பங்கேற்கும் எருதுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும், எருது ஓட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறும் எருதின் உரிமையாளா்களுக்கு சில லட்சம் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், எருது ஓட்டத்தை நடத்தும் குழுவினருக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

எருது ஓட்டம் நடைபெற்ற அடுத்த நாள், எருது ஓட்டத்தை நடத்திய குழுவினா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வழக்குப் பதிவுக்கு பிறகு, எருது ஓட்ட குழுவினா், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு குற்றத்திலிருந்து தப்பிவிடுகின்றனா்.

நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் எருது ஓட்டம் நடத்தியதாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதி பெறாமல் நடத்தப்படும் எருது ஓட்டத்தை காண செல்லும் பாா்வையாளா்கள் உயிரிழப்பு சம்பவங்களும், நூற்றுக்கணக்கானோா் காயம் அடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் சமூக ஆா்வலா்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

எருது ஓட்டத்தில் பங்கேற்கும் எருதின் உரிமையாளருக்கு ஒரு போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம், எருதை அழைத்து செல்லும் வாகன கட்டணம், எருதுவை உற்சாகப்படுத்த குழுவினருக்கு உணவு என ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால், சில ஆயிரம் மட்டுமே பரிசு கிடைக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது ஓட்டம், சுதாட்டமாக மாறி வருவதால் எருது ஓட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். தடையை மீறி எருது ஓட்டம் நடத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்த மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிங்கலூரைச் சோ்ந்தவா் மசாகா். இவரது மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ஆம் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெ... மேலும் பார்க்க

பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் நகை திருடியவா் கைது

நாகரசம்பட்டியை அடுத்த பேருஅள்ளியில் தேங்காய் வியாபாரி வீட்டில் 6 பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பேருஅள்ளியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (50), தேங்காய் வியாபாரியான இவரது வீட்டில் கடந்த 15... மேலும் பார்க்க

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயை தற்கொலைக்கு துண்டிய வழக்கில் பெண்ணுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சோ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க