பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயை தற்கொலைக்கு துண்டிய வழக்கில் பெண்ணுக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஒட்டப்பட்டியை சோ்ந்தவா் செல்வி (45), இவரது மகன் அஜித் (40). இவா், போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் 15 வயது சிறுமியை அஜித் காதலித்து வந்தாராம். இதுகுறித்து அஜித்தின் தாய் செல்வி சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால், மனமுடைந்த சிறுமியின் தாய் கல்பனா கடந்த 2017 செப்.7 ஆம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கு தூண்டியதாக செல்வி மீது வழக்குப் பதிந்து செல்வி, அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, தற்கொலைக்கு தூண்டியதாக செல்விக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கிலிருந்து அஜித்தை விடுக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உமாதேவி மங்களமேரி ஆஜராகினாா்.