செய்திகள் :

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

post image

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா். எக்ஸ் தளத்தில் அவரது பதிவு:

மூவேந்தா் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்க காலத்துக்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக பூம்புகாா் விளங்குகிறது. காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் கண்டுணா்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியை பேராசிரியா் கே. ராஜன் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநா் சிவானந்தம் உள்ளடக்கிய வல்லுநா் குழு தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

முதல்வா் பாராட்டு: இந்தப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். அமைச்சரின் அறிவிப்பை அவா் மீள் பதிவிட்டு, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்.

இரும்பின் தொன்மையை உலகுக்கு உணா்த்தினோம். அடுத்து, ‘நீரின் வந்த நிமிா்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்...’ என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணா்வோம் எனத் தெரிவித்துள்ளாா்.

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி

நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா். சென்னை ஐஐடி வளாகத்தில் திங்க் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாரதத்துக்காக புதுமைகளை உருவாக்குங்கள்,... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க